இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இலங்கைக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 585 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
Published on

கிறைஸ்ட்சர்ச்,

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 178 ரன்களும், இலங்கை 104 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. 8-வது சதத்தை எட்டிய டாம் லாதம் 176 ரன்களும், 4-வது சதத்தை நிறைவு செய்த ஹென்றி நிகோல்ஸ் 162 ரன்களும் (நாட்-அவுட்), கிரான்ட்ஹோம் 71 ரன்களும் விளாசினர். நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 660 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com