

கொழும்பு,
இலங்கைக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் காலேயில் நாளைமறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணியை தோற்கடித்த உற்சாகத்தோடு இந்திய வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.