இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் ஜாக்கர் அலி அனிக் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார்.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:-

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் குமர் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ்,தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் கலீத் அகமது, ஜாக்கர் அலி அனிக்

X

Daily Thanthi
www.dailythanthi.com