ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 3வது நாள் முடிவில் நியூசிலாந்து 111/3

நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 258 ரன் தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 3வது நாள் முடிவில் நியூசிலாந்து 111/3
Published on

வெலிங்டன்,

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் 174 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களும், மேட் ஹென்ரி 42 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் எடுத்து. உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நாதன் லயன் 41 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதனால் முன்னிலை ரன்கள் சேர்த்து நியூசிலாந்து அணிக்கு 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் டாம் லாதம் 8 ரன்களும் , கேன் வில்லியம்சன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வில் யங் 15 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்சேல் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்தார்.

இறுதியில் 3வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. ரவீந்திரா 56 ரன்கள் , டேரில் மிட்சேல் 12 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து வெற்றி பெற இன்னும் 258 ரன் தேவைப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com