எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி - ஷேக் ரஷீத்


எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி - ஷேக் ரஷீத்
x

Image Courtesy: @IPL / @ChennaiIPL

லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே அணியில் ஷேக் ரஷீத் அறிமுக வீரராக களம் கண்டார்.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 19.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே தரப்பில் ஷேக் ரஷீத் அறிமுக வீரராக களம் கண்டார். அவர் 19 பந்தில் 27 ரன் எடுத்து அவுட் ஆனார். இந்நிலையில், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் ஷேக் ரஷீத் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் ஷேக் ரஷீத் கூறியதாவது,

2 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு தவறான ஷாட்டால் அவுட் ஆகி விட்டேன். அடுத்த முறை நிச்சயம் தவறை திருத்தி கொள்வேன். இனி வரும் ஆட்டங்களில் நன்றாக செயல்படுவேன் என நினைக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். இவ்வாறு அவர் கூறினார்.



1 More update

Next Story