என்னை நம்பிய ரோகித் சர்மாவுக்கு நன்றி: ஜடேஜா நெகிழ்ச்சி

நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
என்னை நம்பிய ரோகித் சர்மாவுக்கு நன்றி: ஜடேஜா நெகிழ்ச்சி
Published on

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

நேற்று நடந்த 2வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா மிடில் ஆர்டர் பேட்டிங்கில் களமிறங்கி, அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு இது குறித்து ஜடேஜா கூறியதாவது ;

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அவர் என்னை நம்பினார் மற்றும் நான் எனது நாட்டிற்காக ரன்கள் குவிக்க முடியும் என்று என்னை நம்பினார். எனவே எதிர்காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவுக்காகா சிறப்பாக விளையாடுவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com