பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி
Published on

துபாய்,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்னும் (40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பர்ஹான் 39 ரன்னும் (38 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன்), முகமது ஹபீஸ் ஆட்டம் இழக்காமல் 32 ரன்னும் (20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தனர். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களில் 117 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதையும், பாபர் அசாம் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த டெஸ்ட் போட்டி தொடரிலும் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இந்த போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்ட 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4 இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com