

புதுடெல்லி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் பங்கேற்கிறது.
முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார். விராட் கோலியின் இடத்தில் லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவர் களம் இறங்குவார். ஹர்திக் பாண்ட்யா காயத்தால் ஓய்வில் இருப்பதால் அவரது இடத்தை நிரப்பும் வகையில் மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் 26 வயதான ஷிவம் துபே அழைக்கப்பட்டார். சரவெடி பேட்டிங்கோடு மிதவேகமாக பந்து வீசக்கூடியவர். இந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்பதை கேப்டன் ரோகித் சர்மா சூசகமாக கூறியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் வெளியே உட்கார வைக்கப்படலாம்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை அடையாளம் காண்பதில் இந்திய அணி நிர்வாகம் இப்போதே தீவிரம் காட்ட தொடங்கி விட்டது. இதனால் இளம் வீரர்கள் தங்களுக்குரிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள முயற்சிப்பார்கள். வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியா வலிமையான அணியாக இருப்பதால் தொடரை வெற்றியோடு தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக பாகிஸ்தான் 146 ஆட்டங்களில் ஆடியுள்ளது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் 120 ஆட்டங்களில் விளையாடி 74-ல் வெற்றியும், 42-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டை ஆனது. மூன்று ஆட்டங்களில் முடிவில்லை.
வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்- ரோகித் சர்மா
வங்காளதேசம் சிறந்த அணி. உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி நன்றாக விளையாடி இருக்கிறது. எங்களுக்கு எதிராக விளையாடிய போது எப்போதும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. அதனால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அந்த அணியில் இரண்டு முன்னணி வீரர்கள் இல்லை என்பது தெரியும். ஆனாலும் தரமான அணியாகவே இருக்கிறது. அவர்களுக்குரிய நாளாக அமைந்தால் எந்த அணியையும் வீழ்த்தி விடுவார்கள். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
முழு கவனமும் கிரிக்கெட் மீது தான் உள்ளது- மக்முதுல்லா