தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: ஓவல் இன்விசிபிள்ஸ் சாம்பியன்

இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபிள்ஸ் - டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.
image courtesy:twitter/@thehundred
image courtesy:twitter/@thehundred
Published on

லண்டன்,

தி ஹண்ட்ரட் லீக் கிரிக்கெட் தொடர் (100 பந்துகள்) இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபிள்ஸ் - டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓவல் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 72 ரன்கள் அடித்தார். டிரெண்ட் ராக்கெட்ஸ் தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியால் 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓவல் இன்விசிபிள்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

டிரெண்ட் ராக்கெட்ஸ் தரப்பில் ஸ்டோய்னிஸ் 68 ரன்கள் அடிக்க, ஓவல் தரப்பில் நாதன் சவுட்டர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாதன் சவுட்டர் ஆட்ட நாயகனாகவும், ஜோர்டன் காக்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com