நடப்பாண்டை வெற்றியோடு நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி.. அடுத்த போட்டி எப்போது..?

image courtesy:PTI
2025-ம் ஆண்டை இந்திய அணி வெற்றியோடு நிறைவு செய்துள்ளது.
சென்னை,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (நவம்பர் 14 முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை) 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. இதனையடுத்து நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி 2025-ம் ஆண்டை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
இந்த சூழலில் இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது? யாருடன்? எந்த கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அதற்கான பதிலை இங்கு காணலாம்..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வரும் ஜனவரி மாதம் (2026) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
அதன்படி, இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் நடைபெற உள்ளது. இதுவே இந்திய அணி அடுத்து விளையாட உள்ள போட்டியாகும்.






