

பெல்பாஸ்ட்,
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாறு படைத்தது. இந்த வெற்றி குறித்து அயர்லாந்து அணியின் கேப்டன் லோர்கன் டக்கர் கூறியதாவது;
இந்திய அணிக்கு எதிரான வெற்றி மிகவும் சிறப்பானதாக இருந்தது. பாராட்டுக்கள் அனைத்தும் எங்களது வீரர்களையே சாரும். அந்த ஆட்டத்தில் நாங்கள் போராடி வென்றோம் என்று நினைக்கிறேன். நாங்கள் விடாமுயற்சியுடன் இருந்தோம். கடினமாக உழைத்தோம். இறுதியில் அதற்கான பலனைப் பெற்றது எங்கள் அதிர்ஷ்டம்.
தொடக்கத்தில் இந்தியா மிகவும் சிறப்பாகப் பந்துவீசியது. நல்ல ஷாட்களை அடிப்பது சவாலாக இருந்தது. ஒரு கட்டத்தில் அது கிட்டத்தட்ட ஒரு டெஸ்ட் போட்டி போலவே இருந்தது. ஆனால் நாங்கள் ஆட்டத்தில் நிலைத்து நிற்கவும், ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவும் முயற்சி செய்தோம். பின்னர் வாய்ப்புகள் வந்தபோது அவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன்.
சொந்த மண்ணில் உலக சாம்பியன்களை வீழ்த்துவது மிகவும் சிறப்பானது. இரண்டு அறிமுக வீரர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்பு வந்துள்ளது. அடுத்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப்டுத்துவொம்.”
இவ்வாறு அவர் கூறினார்.