

ஐதராபாத்,
ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 248 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 19.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 24 ரன் வித்தி யாசத்தில் தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 23 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. 102 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் நாளை இரவு 7 மணிக்கு நடக் கிறது.
தோல்விக்கு பிறகு இந்திய வீரர் சஞ்சு சாம்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓவருக்கு 10-12 ரன்கள் வீதம் எடுத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந் தோம். நெருக்கடியான சூழலில் திலக் வர்மாவும், நிதிஷ்குமார் ரெட்டியும் அருமையாக பேட்டிங் செய்தனர். அந்த தருணம் வரை நாங்கள் இலக்கை நோக்கி சரியாகவே பயணித்துக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் திலக் வர்மா (43 ரன்) அவுட் ஆனது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஐந்து விக் கெட்டுகளை இழந்த பிறகும் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. உண்மையிலேயே சிறப்பான விஷயமாகும். இவ்விரு இளம் வீரர்கள் அழுத்தத்தை சமாளித்து, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி யதா? என கேட்கிறீர்கள். பும்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரை போன்ற பவுலர்கள் தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைப்பார் கள். அவர் இந்திய அணியில் இருப்பது அதிர்ஷ்டமே. அதே சமயம் நம்மிடம் சில திறமையான பவுலர்கள் வந்துள்ளனர். அர்ஷ்தீப்சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆட்டங்களில் பிரின்ஸ் யாதவ் பந்து வீசிய விதம் கவனத்தை ஈர்த்தது. அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கி, தொடர்ந்து ஆதரவளிக்கும் போது அவர்கள் இன்னும் சிறந்த வீரர்களாக உருவெடுப்பார்கள்.
இவ்வாறு சாம்சன் கூறினார்.