முகுல் சவுத்ரி ஆட்டத்தை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை - ரிஷப் பண்ட் புகழாரம்

கொல்கத்தா வசம் இருந்த ஆட்டத்தை தனி ஆளாக போராடி திசை திருப்பியவர் முகுல் சவுத்ரி.
முகுல் சவுத்ரி ஆட்டத்தை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை - ரிஷப் பண்ட் புகழாரம்
Published on

கொல்கத்தா,

ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணியே வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தபோது, தனி ஆளாக போராடி ஆட்டத்தை திசைதிருப்பியவர் முகுல் சவுத்ரி. அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து லக்னோ அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட், முகுல் சவுத்ரிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;

முகுல் சவுத்ரியின் ஆட்டத்தை வலைப்பயிற்சியில் பார்க்கும்போது, அவரது திறமையை உணர முடிந்தது. அதை அவர் நேற்றைய போட்டியில் வெளிக்கொண்டு வந்தது மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. தனிப்பட்ட முறையில் நான் நம்பும் ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒருவரை ஒரு வீரராக, ஒரு கேப்டனாக நம்பும்போது, ​​அவர் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்போது, அவரால் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க செய்ய முடியும்.

படோனி நன்றாக விளையாடினார். ஷமி அணிக்குக் கொண்டு வரும் அனுபவம் மிகவும் விலைமதிப்பற்றது. சில நேரங்களில் போட்டி சரியாக அமையாது. ஆனால் அதே நேரத்தில் அவரைப் போன்ற ஒருவர் இருப்பது மிகவும் அற்புதமானது. ஒட்டுமொத்த பந்துவீச்சுப் பிரிவும் சிறப்பாக செயல்பட்டது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com