பேட்டுக்கும், பந்துக்கும் சமமான போட்டி இருக்க வேண்டும்: கம்பீர்

3 வீரர்கள் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.
பேட்டுக்கும், பந்துக்கும் சமமான போட்டி இருக்க வேண்டும்: கம்பீர்
Published on: 

கவுகாத்தி,

கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 406 ரன் இலக்கை இந்திய அணி 43.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. 400 ரன்களுக்கு மேலான ஸ்கோரை இந்திய அணி வெற்றிகரமாக 'சேசிங்' செய்தது இதுவே முதல் முறையாகும். கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமும் (233 ரன், 26 பவுண்டரி 8 சிக்சர்) ரோகித் சர்மா சதமும் (101 ரன்) விளாசினர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.

இது தொடர்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகை யில்,

'நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் பேட்டுக்கும். பந்துக்கும் இன் னும் கொஞ்சம் சமமான போட்டி இருக்க வேண்டும். ஏனெனில் நாம் கிரிக்கெட் பற்றி பேசுகிறோம். ஆனால் இது உண்மையான கிரிக்கெட் அல்ல. இது வெறும் பேட்டிங் மட்டுமே. இது போன்ற ஆடுகளங்களில் பந்து வீசுவது நியாயமானதாக இருக்காது. அவர்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com