சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த பேப் 4 வீரர்கள் இவர்கள்தான்.. மொயீன் அலி, அடில் ரஷித் தேர்வு


சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த பேப் 4 வீரர்கள் இவர்கள்தான்.. மொயீன் அலி, அடில் ரஷித் தேர்வு
x

மொயீன் அலி மற்றும் அடில் ரஷித் தேர்வு செய்தவர்களில் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

லண்டன்,

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும்.

தற்போது இவர்கள் தங்களது கெரியரின் இறுதி கட்டத்தில் உள்ளனர். இதன் காரணமாக வரும் காலங்களில் இவர்களை போன்று சிறந்த வீரர்களாக யாரெல்லாம் இருப்பார்கள்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இது குறித்து பலரும் தங்களது கணிப்பினை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி மற்றும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆகியோர் அடுத்த பேப் 4 வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

இதில் இருவரும் தேர்வு செய்த அடுத்த பேப் 4 வீரர்களில் 3 பேரை ஒரே மாதிரி தேர்வு செய்துள்ளனர். 4-வது வீரரில் மட்டுமே மொயீன் மற்றும் ரஷித் இடையே வேறுபட்ட கருத்து உள்ளது. இருவர் தேர்வு செய்த பேப் 4 பட்டியலிலும் 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மொயீன் அலி தேர்வு செய்த அடுத்த பேப் 4 வீரர்கள்: சுப்மன் கில், ஜெய்ஸ்வால் (இருவரும் இந்தியா), ஹாரி புரூக் (இங்கிலாந்து) மற்றும் ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)

அடில் ரஷித் தேர்வு செய்த அடுத்த பேப் 4 வீரர்கள்: சுப்மன் கில், ஜெய்ஸ்வால் (இருவரும் இந்தியா), ஹாரி புரூக் மற்றும் ஜேக்கப் பெத்தேல் (இருவரும் இங்கிலாந்து)

1 More update

Next Story