மும்பைக்கு எதிரான வெற்றிக்கு இவர்கள்தான் காரணம் - ரஜத் படிதார்

மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது ரஜத் படிதாருக்கு வழங்கப்பட்டது.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் 67 ரன் எடுத்தார்.

மும்பை தரப்பில் பாண்ட்யா, பவுல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 209 ரன் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 12 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. இந்த போட்டின் ஆட்டநாயகன் விருது ரஜத் படிதாருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு கேப்டன் படிதார் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது உண்மையிலே சிறப்பான போட்டியாகும். இது மிகவும் கடினமாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் தங்களுடைய தைரியத்தை இன்று காட்டியிருக்கிறார்கள். அதை பார்க்கும் போதே அற்புதமாக இருந்தது.

எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையிலேயே எங்கள் அணியின் பவுலர்களுக்கு தான் இந்த விருதை கொடுக்க வேண்டும். அவர்கள் தான் வெற்றிக்கு வழிவகுத்தனர். மும்பையில் எந்த அணியையும் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது தடுக்கவே முடியாது. அதுவும் இந்த ஆடுகளத்தில் எங்கள் அணி அதை செய்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது.

எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல முறையில் தங்களுடைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். க்ருனால் பாண்ட்யா கடைசி ஓவர் வீசிய விகிதம் பிரமாதமாக இருந்தது. அதை சுலபமாக செய்ய முடியாது. நாங்கள் இந்த போட்டியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். இதன் மூலம் கடைசி ஓவரில் க்ருனால் பாண்ட்யாவை பயன்படுத்தலாம் என்று நாங்கள் நினைத்தோம்.

இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக பேட்டிற்கு வந்தது. பவுன்சும் நன்றாக இருந்தது. க்ருனால் வீசிய ஒரு ஓவர் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதிரடியாக ஆடி விக்கெட் விழுவது குறித்து கவலைப்பட கூடாது என்று நான் விளையாடினேன். லெக் ஸ்பின்னர் டி20 போட்டியில் மிகவும் முக்கியமான பவுலராக மாறி இருக்கிறார்கள்.

அவர்கள் தான் விக்கெட்டுகளை எடுக்குகிறார்கள். இன்று அவர் நன்றாக பந்து வீசினார். நாங்கள் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினோம். மும்பை அணியின் பவுலர்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்த விரும்பினோம். அது இன்று நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com