"அடுத்த போட்டி ஈடன் பார்க்ல... இதைவிட சின்னது" - 3வது டி20 தோல்விக்கு பின் நியூசிலாந்து கேப்டன் பேச்சு

4-வது டி20 போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி
Published on: 

வெலிங்டன்,

பவர்பிளேயில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துவிட்டதாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.

முன்னிலை

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும், பின் ஆலன் 40 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 199 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மாவும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர்.

அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில் அவர் 38 பந்துகளில் 9 பவுண்டரிகள், 11 சிக்சர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம், வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இப்போட்டிக்கு பின் பேசிய நியூசிலாந்து கேப்டன்,

“அபிஷேக் சர்மாவும் வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியாக விளையாட தொடங்கிவிட்டால், அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதை ஐபிஎல் தொடரிலேயே பார்த்திருக்கிறோம். இப்போது நியூசிலாந்து மண்ணிலும் அவர்களது அதிரடியை பார்த்துவிட்டோம். பவர்பிளேயில் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்துவிட்டனர்.

இந்திய பேட்டர்களை கட்டுப்படுத்துவது எளிதல்ல. இருப்பினும், அவர்களைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். அடுத்ததாக 4-வது டி20 போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்த மைதானம் இதை விட சிறியதாக இருக்கக்கூடும். எனவே, இந்திய பேட்டர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை கண்டறிய வேண்டியுள்ளது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com