ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தீக்சனா பங்கேற்க மாட்டார் - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @OfficialSLC
Image Courtesy: @OfficialSLC
Published on

கொழும்பு,

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது.

தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் அவருக்கு காயம் உள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேஷ் தீக்சனா இடம் பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தீக்சனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com