

லார்ட்ஸ்,
இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அத்துடன், தொடரையும் பறிகொடுத்தது. இந்த நிலையில், தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது;
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, 45வது ஓவர் வரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். சுமார் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தோம் என்று நினைக்கிறேன். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நாங்கள் நன்றாகப் பந்துவீசவில்லை. குறிப்பாக பவர்பிளேயில் சரியாக பந்து வீசவில்லை. அதன்பிறகு, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதை சாதகமாகப் பயன்படுத்தி அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தில் நாங்கள் மீண்டு வர அவர்கள் ஒரு வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
விராட் கோலி,ரோகித் சர்மா இருவரும் பல ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். இன்று ரோஹித் பேட் செய்த விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.