சென்னை- கொல்கத்தா ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

சேப்பாக்கத்தில் வரும் 11-ந் தேதி சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
Image Courtesy: @KKRiders / @IPL / @ChennaiIPL
Image Courtesy: @KKRiders / @IPL / @ChennaiIPL
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி வரும் 8ம் தேதி முல்லன்பூரில் பஞ்சாபையும், இதைத்தொடர்ந்து வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியையும் சந்திக்கிறது.

இரு போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில், சேப்பாக்கத்தில் வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள சென்னை- கொல்கத்தா ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுகொள்ளலாம்.

ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com