சென்னை - பஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

மே 1-ந் தேதி நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
Image Courtesy: AFP / X (Twitter) 
Image Courtesy: AFP / X (Twitter) 
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 6-வது ஆட்டம் இதுவாகும்.

சென்னை-பஞ்சாப் இடையிலான ஆட்டத்துக்குரிய டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (திங்கட்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும் ஒருநபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com