ஒரே ஆண்டில் அதிக கேட்ச்கள்... - உலக சாதனை படைத்த திலக் வர்மா

இதற்கு முன்பு 25 கேட்ச்களை பிடித்ததே சாதனையாக இருந்தது.
ஒரே ஆண்டில் அதிக கேட்ச்கள்... - உலக சாதனை படைத்த திலக் வர்மா
Published on: 

கிறைஸ்ட்சர்ச்,

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

முன்னிலை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

உலக சாதனை

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்து வருகிறது. இப்போட்டியில் டிம் செய்பெர்ட், டேரில் மிட்செல் ஆகியோரின் கேட்ச்களை திலக் வர்மா பிடித்தார். இதனால் 2026-ம் ஆண்டில் அவர் பிடித்த கேட்ச்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இந்தோனேசிய வீரர் டேனில்சன் ஹவோ, 2025-ம் ஆண்டில் 25 கேட்ச்களைப் பிடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார்.

அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் பட்டியல்

26 கேட்ச்கள் – திலக் வர்மா (இந்தியா), 2026

25 கேட்ச்கள் – டேனில்சன் ஹவோ (இந்தோனேசியா), 2025

24 கேட்ச்கள் – முகமது வசீம் (ஐக்கிய அரபு அமீரகம்), 202

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com