

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா தனது பேட்டிங் நிலை மற்றும் அணியின் தேவைக்கேற்ப விளையாடுவது குறித்து பேசியுள்ளார். தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் விளையாட அவர் ஆவலுடன் உள்ளார். தனக்கு 3-வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும் என்றாலும், அணியின் நலனுக்காக எந்த இடத்திலும் களமிறங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடும்போது, மிடில் ஆர்டர் வீரர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு குறைவாகக் கிடைக்கலாம். இருப்பினும், அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றிக்கொள்வதே முக்கியம். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தால், பொறுமையாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்பேன்.தொடக்க வீரர்கள் நீண்ட நேரம் விளையாடினால் முதல் பந்திலிருந்தே அதிரடியாக ரன்கள் எடுக்கத் தயாராக இருப்பேன்.
இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருப்பது தனது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.தனிப்பட்ட விருப்பத்தைவிட அணியின் தேவைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.