டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் ; மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்

இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றோரு போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் , நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன
டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் ; மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்று மோதல்
Published on

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது.அதில் பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.இரவு 7.15 மணிக்கு நடக்கும் மற்றோரு போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் , நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com