

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
இதில் கோவை நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணி 18 ஓவர்களில் அதை எட்டிப்பிடித்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் (70 ரன், 6 பவுண்டரி, 5 சிக்சர்), மணி பாரதி (81 ரன், 8 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் நொறுக்கினர். ஆட்ட நாயகன் விருது மணிபாரதிக்கு அளிக்கப்பட்டது.