டி.என்.பி.எல் கிரிக்கெட்: நெல்லையை வீழ்த்தி திருப்பூர் முதல் வெற்றி

8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்றிரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, திருப்பூர் தமிழன்சை சந்தித்தது.
டி.என்.பி.எல் கிரிக்கெட்: நெல்லையை வீழ்த்தி திருப்பூர் முதல் வெற்றி
Published on

இதில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி 19.5 ஓவர்களில் 148 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சூர்யபிரகாஷ் 43 ரன்களும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), அர்ஜூன் மூர்த்தி 35 ரன்களும் (16 பந்து, 7 பவுண்டரி) எடுத்தனர். தொடர்ந்து ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. மான் பாப்னா 72 ரன்கள் (51 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 3-வது ஆட்டத்தில் ஆடிய திருப்பூர் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.

இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com