டிஎன்பிஎல்: திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு...!

இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
Image Courtesy: @TNPremierLeague
Image Courtesy: @TNPremierLeague
Published on

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com