டி.என்.பி.எல்: முதலாவது தகுதி சுற்றில் கோவை- திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை

டி.என்.பி.எல். தொடரில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
image courtesy: twitter/@TNPremierLeague
image courtesy: twitter/@TNPremierLeague
Published on

திண்டுக்கல்,

8-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த கோவை கிங்ஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடம் வகிக்கும் ஷாருக்கான் தலைமையிலான நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்சும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அல்லது திண்டுக்கல் டிராகன்ஸ்) 2-வது தகுதி சுற்றில் மோதும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com