டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருப்பூரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்


TNPL Cricket: Chepauk Super Gillies beat Tiruppur
x

image courtecy:twitter@TNPremierLeague

தினத்தந்தி 6 Jun 2025 10:30 PM IST (Updated: 6 Jun 2025 10:56 PM IST)
t-max-icont-min-icon

சேப்பாக் தரப்பில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 77 ரன்கள் எடுத்தார்.

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் கோவையில் இன்றிரவு நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது .சிறப்பாக விளையாடிய துஷார் ரேஜா 79 ரன்கள் எடுத்தார். ரஞ்சன் 38 ரன்கள் எடுத்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு திருப்பூர் 173 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 174 ரன்கள் இலக்கை நோக்கி சேப்பாக் அணியின் ஆசிக் மற்றும் மோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆசிக் 2 ரன்களின் அவுட்டாக, மோஹித்துடன் கைகோர்த்தார் பாபா அபராஜித். இருவரும் ரன்களை வேகமாக குவிக்க, 46(22) ரன்களின் மோஹித் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் ரன்களை வேகமாக குவித்தார். பாபா அபராஜித் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 16 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது. பாபா அபராஜித் 77 ரன்களுடனும், விஜய் சங்கர் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

1 More update

Next Story