டி.என்.பி.எல். கிரிக்கெட்; நெல்லை - திருச்சி அணிகள் இன்று மோதல்

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
Image Courtesy: @GrandCholasTNPL 
Image Courtesy: @GrandCholasTNPL 
Published on

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவை, நெல்லை, சேலம், திண்டுக்கல் ஆகிய 4 இடங்களில் நடக்கிறது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் தற்போது வரை 2 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com