டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி அணிகள் நாளை மோதல்

லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
Image Couurtesy: @TNPremierLeague
Image Couurtesy: @TNPremierLeague
Published on

கோவை,

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் நாளை நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. சேலம் அணி தனது முதல் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி உள்ளது. அதேவேளையில் திருச்சி அணி தனது முதல் ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக தோல்வி கண்டிருந்தது.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிப்பயணத்தை தொடர சேலம் முயற்சிக்கும், அதேவேளையில் சேலத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய திருச்சி அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com