டி.என்.பி.எல். கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை தொடக்கம்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

8 அணிகள் இடையிலான 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கிறது.

இதன் முதல் கட்ட ஆட்டங்கள் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையும், பிளே-ஆப், இறுதிப்போட்டி உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையும் நடக்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.300, ரூ.500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. District.in செயலி மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாங்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com