டி.என்.பி.எல். கிரிக்கெட்: 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி
x

image courtesy: TNPL twitter

19.4 ஓவர்களில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திண்டுக்கல்

9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி திருப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது .

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாத்விக், துஷார் ரேஹஜா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இருவரும் முறையே 41 ரன்கள் மற்றும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு திருப்பூர் அணி 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சந்தோஷ் குமார் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் அஜித்தேஷ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிஷ் 17 ரன்களிலும், ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 19.4 ஓவர்களில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.

1 More update

Next Story