டிஎன்பிஎல்: திருச்சிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல்


டிஎன்பிஎல்: திருச்சிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திண்டுக்கல்
x

திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

திண்டுக்கல்,

9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கேப்டன் அஸ்வின் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான சிவம் சிங் 37 ரன்கள் எடுத்தார். விமல் குமார் சிறப்பாக விளையாடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சர்ன், சரவணக்குமார் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story