

சென்னை,
10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4-ம் தேதி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்கியது. கடந்த 15-ம் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது.
2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் 18-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.
மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை (28-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனிருதா தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.