டி.என்.பி.எல்.:திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை பந்துவீச்சு தேர்வு


டி.என்.பி.எல்.:திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற கோவை பந்துவீச்சு தேர்வு
x

image courtesy:twitter/@TNPremierLeague

மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சேலம்,

9-வது டி.என்.பி.எல். தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 15-வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ்- கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் 6.45 மணியளவில் போட வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி திருச்சி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story