டி.என்.பி.எல். தகுதி சுற்று 1: திருப்பூருக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு

image courtesy:twitter/@TNPremierLeague
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தோல்வியே சந்திக்காமல் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
திண்டுக்கல்,
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (14 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (10 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்தன. சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.
இதில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி திருப்பூர் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.






