ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

ஐ.பி.எல். அணிகளில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிற வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Published on

கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டித் தொடர் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என தெரிகிறது.

Also Read
2026 ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியானது....சென்னை - பெங்களூரு போட்டி எப்போது ?
ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

இதற்கிடையே, ஈரான் - அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது. விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா நாட்டு வீரர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Also Read
ஐபிஎல்: தயாரான விராட் கோலி...உற்சாகத்தில் பெங்களூரு ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

இதனால் ஐ.பி.எல். அணிகளில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிற வீரர்கள் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஐ.பி.எல். அணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளின் வீரர்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வருவது கடினமான பணியாக இருக்கும். மேலும், மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் காரணமாக விமான கட்டணங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன,” என்று கூறினார். அதுமட்டுமின்றி சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு விநியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நெருக்கடிகளை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று ஐ.பி.எல். அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com