

இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. தம்புல்லாவில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
டாஸில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் ஏ’அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இலங்கை ’ஏ’ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த இரு அணிகளும் முந்தைய ஆட்டத்தில் மோதியபோது, டிஎல்எஸ் (DLS) முறையில் ஆப்கானிஸ்தான்-ஏ அணியை இலங்கை-ஏ அணி வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.