

டாக்கா,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்ட்டுள்ளது.16 வீரர்கள் கொண்ட அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 29 வயதான ஆப் ஸ்பின்னரான அலிஸ், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் வங்காளதேச ஏ அணிக்காக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். 19 லிஸ்ட் ஏ போட்டிகளில் 17.05 சராசரியில் 35 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒரு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.அவர் இடம் பெற்றுள்ளார்.
தேர்வுக்குழுத் தலைவர் ஹபிபுல் பஷார் கூறுகையில், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர் தேவைப்படுவதால் அலிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
லிட்டன் தாஸ் (கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடாய் (துணைக் கேப்டன்), தான்சித் ஹசன், சைப் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொசாடெக் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நூருல் ஹசன் சோஹன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், ஷோரிபுல் இஸ்லாம், அலிஸ் அல் இஸ்லாம்.