முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற உள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

ஹராரே,

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் வரும் 14-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா தலைமையிலான அந்த அணியில் பிளஸ்சிங் முசரபானி, வெஸ்லி மாதவரே பிரையன் பென்னட் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி விவரம் பின்வருமாறு:-

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, டினோடெண்டா மபோசா, வெலிங்டன் மசகட்சா, வின்சென்ட் மசகேசா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளஸ்ஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்காரவா, நியூமன் நியாம்ஹுரி, தபத்ஸ்வா சிகா.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com