

விந்தோக்,
ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 185 ரன்கள் குவித்துள்ளது.
நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் இன்று நடைபெற்று வரும் 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக 51 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே தரப்பில் அந்த அணியின் வெஸ்லி மஹ்விரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கி விளையாட உள்ளது.