முத்தரப்பு டி20 - ஜிம்பாப்வேயை சுருட்டிய தென் ஆப்பிரிக்கா... 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென் ஆப்பிரிக்க கேப்டன் பியோர்ன் போர்டுயின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா
Published on

விந்தோக்,

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வேயை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

4வது லீக்

நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ்

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக 51 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே தரப்பில் அந்த அணியின் வெஸ்லி மஹ்விரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

142 ரன்கள்

இதையடுத்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அபார வெற்றி

ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறினர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கேப்டன் பியோர்ன் போர்டுயின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com