

விந்தோக்,
நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.
நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் நமீபியா , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜன் பிரைலிங்க் அதிகபட்சமாக 60 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க வீரர் பிரநீலன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாடி வருகிறது.