முத்தரப்பு டி20 தொடர்: மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு

ஆடம் மில்னே, மேட் ஹென்ரி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

வெலிங்டன்,

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் ஜூலை 14-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரர்களான ஆடம் மில்னே மற்றும் மேட் ஹென்ரி நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்ரி, பெவன் ஜேக்கப்ஸ், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீபர்ட், இஷ் சோதி

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com