முத்தரப்பு டி20 தொடர்; நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் விலகல்

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது கிளென் பிலிப்ஸ்-க்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Image Courtesy: @BLACKCAPS / @ICC
Image Courtesy: @BLACKCAPS / @ICC
Published on

வெல்லிங்டன்,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் விலகி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் ஆடிய போது அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்பதால அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com