

விந்தோக்,
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 228 ரன்கள் குவித்துள்ளது.
நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் இன்று நடைபெற்று வரும் 6வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நமீபியா அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரிட்டோரியஸ், கானர் எஸ்டர்ஹய்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கானர் 88 ரன்களில் அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய பிரிட்டோரியஸ் 53 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் அந்த அணியின் ஜன் பல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நமீபியா களமிறங்கி விளையாட உள்ளது.