முத்தரப்பு டி20 தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணி

தென் ஆப்பிரிக்க டி20 அணியின் வழக்கமான கேப்டனான மார்க்ரமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் ஜூலை 14-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க டி20 அணியின் வழக்கமான கேப்டனான மார்க்ரமுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க டி20 அணி புதிய கேப்டன் ரஸ்ஸி வான் டெர் டுசென் தலைமையில் களமிறங்க உள்ளது. அத்துடன் இந்த அணியில் 4 அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

ரஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆண்டிலே சிமிலன்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com