முத்தரப்பு டி20 தொடர்; தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
Image Courtesy: @ZimCricketv
Image Courtesy: @ZimCricketv
Published on

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. ஜிம்பாப்வே தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2வது ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் தோல்வி கண்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் கட்டாய வெற்றி நெருக்கடியில் ஜிம்பாப்வே களம் காண்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே தோல்வி கண்டால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாது. அதே வேளையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com