

விந்தோக்,
நமீபியா , தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது.
நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜன்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாட உள்ளது.